உரையாடல்களின் மறதியில்
இழுபடுகின்றன புள்ளிகளற்ற கோடுகள்...
கோடுகளின் அழுத்தமான விவாதத்தில்
வார்த்தைகளைக் கோர்க்க
முழுதாய் மனமின்றி
புன்னகைக்கிறது வரைமௌனம்...
மௌனத்தின் அர்த்தங்களையும்
வார்த்தைகளின் அனர்த்தங்களையும்
மொழிபெயர்க்க மறந்து
பாதியாய் சிக்கலில் நிற்பதில்லை
கோலக்கோடுகளின் நீளங்கள்..
இரைந்திடும் வண்ணப்பிழைகளை
உறைநிமிடங்களில் இழைக்கிறது,
விடியலின் நொடித்துளிகளால்
வெளியிடப்படும் ஒற்றை மன்னிப்பு..
அடுத்து, எழுத்து மழை பெய்யத் துவங்குகிறது
கோலத்திற்குள் நெளியும் புள்ளிகளாய்...
- தேனு
நன்றி உயிரோசை
No comments:
Post a Comment