சந்தித்தோம்
என்று? எங்கு? எப்படி?
சரிவர நினைவிலில்லை எனக்கு!!!
.
ஓரிரு வார்த்தைகள்
நாட்கள் நகர
மணிகணக்கு உரையாடல்களாயின
.
தடம்தேடி நிற்கையிலே
தோள் தந்தாய் நீ
இளைப்பாறினேன் நான்
கைகோர்த்து பயணித்தோம்!!!
.
காதலியா?
பலரது அர்த்தமற்ற வினாக்களுக்கு
விடையுரைக்க
பேசாதிருந்த சில வருடம்
அனல்கக்கிய போர்க்காலம்!!!
என்றும் நெஞ்சமதில் வடுவாய்!!!!
.
என் கவிதைகளைப் பற்றி
எவரிடமும் சிலாகிக்க
சற்று தயக்கம் எனக்கு,
.
உன்னிடம் மட்டும் சிலாகிப்பதேன்?
யோசிக்க வைக்கும் கேள்விதான்!
இன்றும் விடை தேடி நான்..
.
எனக்கு வாய்ப்பவள்
எப்படி எடுத்துக் கொள்வாள்?
.
உனக்கு வாய்ப்பவன்
உணர்ந்து அனுமதிப்பானா?
.
இரு கேள்விகளுடன்
தொடர்கிறது வார்த்தைகளுடனான
நமது மௌனப் போராட்டம்!
.
வாய்ப்பவர்கள் எப்படி இருப்பினும்
தொடரவே விழைகிறது
நெடுந்தூர நட்பு பயணம்
ஆழமான நினைவுகளுடன்!!!!
வாய்ப்பவர்கள் எப்படி இருப்பினும்
ReplyDeleteதொடரவே விழைகிறது
நெடுந்தூர நட்பு பயணம்
ஆழமான நினைவுகளுடன்!!!!
தேன்....மிகவும் அற்புதம்....:-)