Tuesday, March 15, 2011

எஞ்சிய மௌனத் துளிகள்



முட்டுச்சந்தின்
அந்தவொரு தேநீர்க்கடையில்
கிடத்தப்பட்டிருந்தன
எச்சில் கோப்பைகள்..
.

கோப்பைகள் வழியே
மிளிரும் ஒளிப்பிரிகைகளுக்கும்
தயக்கத்துடன்
மிச்சப்பட்டிருந்த தேநீர்த்துளிகளுக்குமான
இடையில் நீளும் மௌனங்கள்..
.
பார்வைகள் குறுக்கப்பட்டு
மீண்டும் விரிக்கப்படுவதேனோ
சிற்சில விழிகளுக்கு
மட்டுமிட்ட விதியென
நிற்கிறது யூகம்..
.
மிளிர்ந்திடா துளிகள்
ஒவ்வொன்றாய் பிரிக்கப்பட்டு
ஒரே கோப்பையினுள்
சேமிக்கப்பட,
ஒரு கணத்தில்
நிரம்பி வழிந்தது..
.
துடிப்புமில்லை, துள்ளலுமில்லை!!
நிரம்பி வழியும்
அதுவுமொரு எச்சில் கோப்பை...

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4100

1 comment:

  1. அருமை ....நிகழ்வியல் பற்றி எதோ ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பதாய் தோன்றுகிறது !

    ReplyDelete