இருள்சூழ் வீடு
சுருண்டு கிடந்தன
அகமும் புறமும்!
அன்னையா?
வளர்க்கத் தெரியுமா?
வளர்த்தால் போதுமா?
வினாக்கள் வலுத்து
மருகி சீற்றம்..
வசையினது விசை
சற்று ஆழமாக...
கருகும் மலர்கள்
துடிப்பு தொடர்ந்தது!!
அன்று
பிடியாது கூட்டுடனே
பயணிக்க எத்தனித்தேன்
.
இன்றோ
அத்தொடர்பயணம்
தடங்களுடன் தயக்கம்..
சுரக்க மறுத்ததில்லை
அதரங்கள் துடிக்கின்றன
மெய்யுரைக்க,
சுரக்கவே இல்லை!!!
என்றுமன்றி இன்று
கால் சலங்கை
கனலாக உறுத்தியது
- தேனு
நன்றி வார்ப்பு,
http://www.vaarppu.com/view/2392/
அருமை தேனு கவிதை.. தொடரட்டும்..
ReplyDeleteநன்றி தேனம்மை Ma'am :)
ReplyDelete