இறக்கும் தருணத்திலோர் பறவை..
வெட்டுண்ட சிறகுகள் ஆங்காங்கே
குருதி கலந்த குப்பைகளுள்...
ஒவ்வொன்றாக கண்டெடுத்து
ஒட்டுவிக்க முயற்சிப்பதை
என்னவென்று குறித்து வைக்க?
.
மீளாது அதற்கான பாசத்துடன்
இணைப்பறவையின் அல்லாடல்கள்...
யுத்தம் தெளிக்கும் அந்நிமிடங்கள்...
நிச்சயமாக வசப்படமாட்டா
ஓரிரு வரிகளின்
உணர்த்தப்படலில்!!
.
அடை காத்த முட்டைகள்
நச்சுப்படிகங்களாக மாறியதற்கான
காரணிகள் யாதாகும்?
அலசப்பட நேரமில்லை..
இறக்கும் தருணத்தில் பறவை இரண்டு...
- தேனு
வெட்டுண்ட சிறகுகள் ஆங்காங்கே
குருதி கலந்த குப்பைகளுள்...
ஒவ்வொன்றாக கண்டெடுத்து
ஒட்டுவிக்க முயற்சிப்பதை
என்னவென்று குறித்து வைக்க?
.
மீளாது அதற்கான பாசத்துடன்
இணைப்பறவையின் அல்லாடல்கள்...
யுத்தம் தெளிக்கும் அந்நிமிடங்கள்...
நிச்சயமாக வசப்படமாட்டா
ஓரிரு வரிகளின்
உணர்த்தப்படலில்!!
.
அடை காத்த முட்டைகள்
நச்சுப்படிகங்களாக மாறியதற்கான
காரணிகள் யாதாகும்?
அலசப்பட நேரமில்லை..
இறக்கும் தருணத்தில் பறவை இரண்டு...
- தேனு
நன்றி உயிரோசை
நீங்க எழுதியதிலேயே எனக்கு மிகப் பிடித்த கவிதை இதுதான்... கலக்கீட்டிங்க தேனு...
ReplyDeleteநன்றி ஜெயா.. நிறைய பேர் சொல்லிட்டாங்க இது தான் ரொம்ப நல்லா இருக்கு னு... :)
ReplyDelete