உனக்காகவென சேகரிக்கப்பட்ட
வண்ணத்துநிலவுகள்...
அவை லயித்திருக்கும்
அந்தவொரு மாலைப்பொழுதில்
வெள்ளை ரோஜாவாய் நீ...
நிர்வாணமாகின
வண்ணங்களைத் துறந்திட்டு
நிலவுகள் யாவும்...
.
சகிப்பதற்கில்லையாம்..
உன் ஒவ்வொரு அங்கமும்
வெள்ளை நிர்வாணப்படுதல்..
அங்கங்கள் ஒவ்வொன்றும்
வண்ணங்களால் அலங்கரிக்கப்படுவதற்கான
சுகம்..
ரசித்தபடி சிறகடிப்பதில்
கொள்ளை பிரியம்
அவ்வெள்ளை நிலவுகளுக்கு...
.
அவைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
வெள்ளை நிர்வாணத்தின்
மொத்த அழகினிற்கும்
ரசிகன் நானென்பது..
- தேனு
நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13360&Itemid=139
அழகு !
ReplyDelete//அவைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
ReplyDeleteவெள்ளை நிர்வாணத்தின்
மொத்த அழகினிற்கும்
ரசிகன் நானென்பது..//
அருமையான முடிவு...
அசத்தலான கவிதை...
நன்றி கனாக்காதலன் :)
ReplyDeleteநன்றி ஜெயா.. திருப்தியா இருக்கு நீங்க இவ்வளவு மனம் விட்டு பாராட்டறப்போ..