Monday, March 28, 2011

அவள் நிறையும் கிறுக்கல்கள்


வந்து நிற்கும்
நினைவுகளுக்கெல்லாம்
விடையெனவும் தடமெனவும்
ஆங்காங்கே கிறுக்கப்படும் எழுத்துக்களில்
அவ்வளவுமாய்
அவள்தான் நிறைந்திருக்கிறாள்..
.
நாளுக்கொன்றாய்
நாளைக்குமொன்றாய்
விடுபடும் வார்த்தைக்கோர்வைகள்
பலருக்கு கவிதையாகவே
புலப்படுவது
செயப்பாட்டு விந்தையே..
.
அவைகள் வளுக்கான
என் கிறுக்கல்கள்தான்
என்பதில் ஆணித்தரமென
நிற்பதிலிருக்கும்
உணர்வுப் போராட்டம்
சொல்லி மாளாது..
.
வெண்ணிற தாளினமே,
தூது போ!
தனிமையில் சந்தித்து
என் மனதை
விட்டுவா என்னவளிடம்.....
.
அவளால் மட்டும்
வெறுக்கப்படும்
என் வெற்றுக்கிறுக்கல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து
மரித்துக் கொண்டிருக்கின்றன,
ஆறாம் விரலிலிருந்து விடுபட்டுக்
கரையும்
கண்ணீர் புகையென...
 
 - தேனு


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103276&format=html

2 comments:

  1. அருமையாக எழுதி இருக்கீங்க... திண்ணையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி சித்ரா madam..

    ReplyDelete