நிதம் அரங்கேற்றும்
பின்னிரவினை அடக்க
வழிகள் அறியாதாம்
முன்னிரவு...
.
கடலும் கரையும்
சிலாகிக்கும் அச்சில நொடிகள்
நமக்குள்ளேயும்
நடந்தேறும் மர்ம முடிச்சுகள்
சற்று யதார்த்தத்திற்கு
மீறியவைதான்!!
.
மூன்றாம்பிறை நாற்காலியில்
அமர்ந்து
ஒவ்வொரு மணித்துளியிலும்
இருளின் அரங்கேற்றவேளையினைத்
துழாவித் துழாவித்
தோற்றெழுகிறோம்...
வா! வா!
புரிந்து வகுப்போம்
ஓர் மெல்லிய ஊடகம்...
.
கடல் - கரை - நிலவு
நீ - நான் - இரவு...
மத்தியில் நம்மோடு
இழைந்துருளும் காதல்...
- தேனு
நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13486:2011-03-10-10-09-56&catid=2:poems&Itemid=265
படிமங்கள் வியக்க வைக்கின்றன... நல்லக் கவிதை தேனு...
ReplyDeleteஅருமையான கவிதைங்க... இன்றுதான் உங்கள் ப்லாக் வருகிறேன். It is nice... Following! :-)
ReplyDeleteBest wishes!
நன்றி ஜெயா..
ReplyDeleteரொம்ப நன்றி சித்ரா ma'am... நீங்க என்னோட கவிதைக்கு பின்னூட்டம் போடுவீங்கன்னு எதிர்பார்க்கல.. :)
பின்னிரவோடு ஊர்ந்து செல்லும் காதல்! அவ்வளவு அழகு!
ReplyDeleteமிக்க நன்றி ரசிகன்... :) :)
ReplyDelete