*
வெயில் நீளும் முற்பகல் ஒன்றில்
யாரிடமும் சொல்ல வேண்டாமென ஒரு
நிகழ்வை என்னுள் பதிகிறாய்..
ஒரு வெளியேற்றத்திற்கான கையொப்பம்
இடப்பட்ட தாள்களின் எழுத்துக்கள்
மகிழ்வானதென்று மதுவின் போதையேற்றி நீ செல்ல
பிடரிமயிர் துள்ளலுடன் கூடிய நடையை
வியந்த வண்ணம் நிற்கிறேன்..
அடர்ந்த தனிமையின் சுவர்களில்
நீ விடுத்துச் சென்ற ஒற்றை வரி
வெளியேற்ற செய்தியை
அனுமதிக்கவோ நிராகரிக்கவோ
யாரும் முன்வரவில்லை..
இருப்பை உணர்த்த அமர்கின்ற இருக்கையிடம்
விடைபெறுதல் குறித்து
உரக்க நீ சொல்ல உருண்டோடுகிறது
சக்கரம் பொருத்தப்பட்ட இருக்கை..
யாரிடமும் சொல்லாத ரகசியமென
மௌனமாய் நடந்தேறிய
அந்நிகழ்வை என்னுள் பதிகிறாய்..
*
- தேனு
நன்றி உயிரோசை,
"இருப்பை உணர்த்த அமர்கின்ற இருக்கையிடம்
ReplyDeleteவிடைபெறுதல் குறித்து
உரக்க நீ சொல்ல உருண்டோடுகிறது" - Luv it :)