இருளோடு சல்லாபிக்க
என்னிடம்
விடை பெற்றுக் கொண்டது,
அந்தவொரு விட்டில் பூச்சி
முறையான முன்னிரவில்..
.
எனக்கேற்ற மௌனத்துடன்
வருகை பதிவேடு இன்னமும்
காலியாக கிடந்தது,
அவன் வரும் நிமிடம்
எதிர்நோக்கி..
.
மல்லிகை மணத்துடன்
என் தனிமைக்குள் நுழையும்
ஒருசில எழுத்துக்கள்
ஆசை தீர உதிர்த்திடும்
எங்களுக்குள்ளான
சின்னச் சின்ன ஊடல்களின்
சிங்காரங்களை...
.
சீண்டிவிட்டு மறைந்திட்டான்
மீண்டும் ஒளியைத்
தன்வசம் இழுத்துக் கொண்டு
அவ்விருளுக்குள்...
கண்ணாமூச்சி ஆட்டம்,
எனக்கும் பிடித்தம்தான்
அவனுடன் விளையாட..
.
விளையாடிய களைப்பில்
தணல் தூண்ட நிலவை
அழைக்கிறேன்,
அணைப்புகளற்று இன்று
குளிர்கிறதாம்,
பின்னிரவின் சிலிர்ப்புகளுடன்
நடுங்குகிறது என் தேகம்..
- தேனு
நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104176&format=html
மல்லிகை மணத்துடன்
ReplyDeleteஎன் தனிமைக்குள் நுழையும்
ஒருசில எழுத்துக்கள்
ஆசை தீர உதிர்த்திடும்
எங்களுக்குள்ளான
சின்னச் சின்ன ஊடல்களின்
சிங்காரங்களை...
.
....very nice.
நல்ல முயற்சி!
ReplyDeleteவாழ்த்துகள் தொடர்க...
ஓவியங்களும் நேர்த்தி
நன்றி சித்ரா Madam..
ReplyDeleteநன்றி நேசமித்திரன் sir..