Monday, April 4, 2011

நின்றாடும் மழை நாள்


மழை துவங்கும் நாளொன்றில்
இரகசியமாகச் சிலாகித்து
லயித்திருந்தேன்
தேநீர் கோப்பையுடன்..
.
சன்னல் கம்பிகளோடு
ஒத்திருக்கும் மழைத் துகள்கள்
ஒய்யாரமாய் விழுந்திடும்
என்னறையில்
அழையா விருந்தாளியென
தனிமையின் மீள்வருகை..
.
கோப்பை வெறுமையைக்
கவிழ்க்க மனமின்றி
தொலைத்த தருணங்களைப்
பிரசுரிக்க
இறுக்கம் தளர்த்தி வைக்கிறேன்
மூன்று கால் நாற்காலியில்..
.
மழை நிறங்களை
இரசிக்கும் பட்சத்தில்
துளி துளியாய் சாரலைத்
தேக்கி வைக்கும்
தேநீர் கோப்பையின் யுக்தி
உணர்ந்திட்டது போலும்
மெல்ல மூடிய சன்னல்...
.
மழையின் மிச்சத்தில்
கண்டுணரா பிரதிகளாக
நிகழ்வதை மறந்து
இறந்த காலத்தின் உச்சத்தில்
துயில் கொள்கிறோம்
நானும்,
நெற்றி பரப்பின் ஒரு துளி சாரலும்...
.
 - தேனு

நன்றி திண்ணை

2 comments:

  1. மழை துவங்கும் நாளொன்றில்
    இரகசியமாகச் சிலாகித்து
    லயித்திருந்தேன்
    தேநீர் கோப்பையுடன்..


    ...... எங்களையும் லயிக்க வைக்கும் வரிகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சித்ரா madam..

    ReplyDelete