பேச்சுத்துளிகள்
சில யுகங்களை
கடந்திருக்கும் யதார்த்தம்
நமக்கு மட்டுமே உட்பட்டது..
.
சாரலில் மயங்கியிருந்த
உன் மடிமீது
துயில் கொள்கின்றன
சொடுக்கப்படும்
என் விரல்கள்..
.
நிலவுகளை அள்ளித் தெளிக்கும்
உன் கரங்களில்
என்னை முழுதாய்
ஏந்திக் கொள்ளும்
அழகினையும் கற்றுத்தான் வைத்திருக்கிறாய்..
.
நிதம் நமக்கான
குறிப்புகளின் வெற்றிடத்தை
நிரப்பி விடுகின்றன,
அள்ளியெடுத்துக் கதைக்கப்படும்
ஒன்றிரண்டு வண்ணக்கவிதைகள்...
.
வெட்கத்தோடு நூலிழையில்
பின்னப்படும் தென்றல்..
அது வீசும் உன் முகவரியில்
இப்படித்தான் ஒருசில சாரல்கள்
காதல் நுகர்கின்றன...
இசை மழைகிறது... மழை இசைகிறது...
- தேனு
நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041010&format=html
வெட்கத்தோடு நூலிழையில்
ReplyDeleteபின்னப்படும் தென்றல்..
அது வீசும் உன் முகவரியில்
இப்படித்தான் ஒருசில சாரல்கள்
காதல் நுகர்கின்றன...
...So sweet! :-)
அழகு
ReplyDeleteநன்றி சித்ரா Madam..
ReplyDeleteநன்றி ரமேஷ்..