Tuesday, April 5, 2011

பழியின் நுழைவாயில்



நிலவொழுகும் நள்ளிரவில்
கள்ளிச்செடி முட்களின்
குருதி வண்ணம்
மேனியெங்கும்
புள்ளிகளாய் வழிந்து கொண்டிருந்தன..

விவேகம் விலக்கப்பட்டு
வேகம் மட்டுமே உருவமாய்
தொடர்கிறது
கனத்துப் போன உயிரொன்றின் பயணம்..

அவ்வேகம்
இன்றுவரை துளியளவும்
எதிர்படாததாகவே
தெரிவதில்
வியப்பொன்றும் இருக்கவில்லை..

இதோ தென்பட்டு விட்டது
அதற்கான புற்று வளை..
பெருமூச்சுகள் தீர்ந்திட
சிறு துவாரம் வழி
நுழைந்தும் விட்டாகியது..

அடுத்த சில நொடிகளில்
கையில் கடப்பாரையுடன்
துரத்தியவன்
வெள்ளை நுரை
கக்கி கீழ் விழுந்தான்..

நீலம் பாய்ச்சி
நரகத்தின் விளிம்பில்
அவனை உட்புகுத்தி
அருகிருந்த புதருக்குள்
சற்றும் அரவமின்றி
மறைந்தது
மற்றுமொரு அரவம்..


- தேனு

நன்றி கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13976:2011-04-05-08-10-44&catid=2:poems&Itemid=265

6 comments:

  1. விவேகம் விலக்கப்பட்டு
    வேகம் மட்டுமே உருவமாய்
    தொடர்கிறது
    கனத்துப் போன உயிரொன்றின் பயணம்..


    ..... உணர்வுகளின் தாக்கம், இந்த வரிகளில் நன்கு தெரிகிறது.

    ReplyDelete
  2. ஒரு கவிதை என்பது காட்சிப்படுத்துதலும் அக்காட்சியை நீட்சிப்படுத்துதலும் என்று நண்பனொருவன் என்னிடத்தில் சொல்லியிருக்கிறான்.. அதை நான்கூட பலமுறை உணர்ந்து இருக்கிறேன் நண்பா... உங்களுடைய இந்தக் கவிதை எனக்கு மீண்டும் அதை நினைவுப்படுத்தியிருக்கிறது... இந்த அருமையானக் கவிதைக்கு நன்றி நண்பா... வியக்கிறேன்... :-)

    ReplyDelete
  3. தேனு எப்படி இதெல்லாம்?

    ReplyDelete
  4. //உணர்வுகளின் தாக்கம், இந்த வரிகளில் நன்கு தெரிகிறது//
    நன்றி சித்ரா madam

    ReplyDelete
  5. நன்றி ஜெயா... இவ்வளவு அழகான பின்னூட்டத்திற்கும், ரசித்ததைப் பகிர்ந்தமைக்கும்..
    நன்றி ரமேஷ்..

    ReplyDelete