மெய்யோடு இழைந்துருளும்
அவ்விருளுக்கான நிசப்தத்துடன்
நடந்தேறும் காதல் களியாட்டம்...
.
கருங்கம்பளம் பரப்பி
வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி
முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது
நிலவுக்காதலனுக்கு...
ஊடல் தேய்ந்து கூடலும்
கூடல் தேய்ந்து ஊடலும்
மாற்றங்கள் நிதர்சனம்...
.
கம்பளத்துக்குள் விழுங்கப்பட்டு
மாதம் இரு நாள்..
காதலனும் காதலியும்
எப்படி கூடுவர்?
இரகசியம் வெளிப்பட
பற்பல கவிதைகள் வழி
இன்றும் விடை தேடி நான்..
ஊடல்கள் ஊருக்கே
பிறைகளாக வெளிச்சப்பட்டு
முகம் திருப்பும் காதலனின்
பொய்க்கோபம் தீர
என்னென்ன தூதனுப்புகிறாள் காதலி?
ஆயுள் குறைந்த இவ்வூடலும்
கூடிப் பிணைந்திடும் இறுக்கம்தான் இங்கே..
எத்தனை காலம் கழியினும்
எத்தனை காதல் வருமினும்
இளமை மிளிரும் இரவுப்பெண்ணிற்கான
காதல் வனப்புகள்
என்றும் அழகுதான்...
நன்றி திண்ணை
இரவு பெண்ணின் நாணமோ? கீழ்வானம் காலையில் சிவந்துக்கொண்டு தினம்...
ReplyDeleteஅருமை நண்பா... வாழ்த்துகள்...