*
அடர்ந்த செம்பவள வனத்தை
வெண்சிறகுகளையும் வண்ணப்புன்னகையையும் கொண்டு
அரசாள்கிறாள் நிலவதனி..
அரண் மறைந்த ஓர் நாள்,
வனத்தின் மையத்தில்
கருஞ்சிறகுகளுடனும் வெண்புன்னகை யுடனும்
கந்தர்வனொருவனை
அவள் காண நேர்கிறது.
அவனும் அவளும் விழிகளாலேயே
சில தினங்களுக்கும்
மொழியினாலே சில தினங்களும்
பேசிக் கொள்கின்றனர்..
தங்களை மறந்த ஓர் காலத்திற்குப் பிறகு
உடல் மூலமாகவும் பேசிக்கொள்ள
தீப்பொறிகள் மெலிதாய் கிளம்பி
சிறகுகள் அழிந்ததையும் மறந்து
துயில் கொள்கின்றனர் தினமும்..
எண்ணி 30 வாரங்களுக்குப் பிறகு
வனமே கொண்டாடும் விதம்
இளவரசியின் வருகை நாள் குறிக்கப் பெறுகிறது.
இன்னும் கூடுதலாக 90 நாட்கள் கழித்து
அரசியும் இளவரசியும்
அரியணையில் அரசாண்டபடி சிரித்துக் கொண்டிருந்தனர்.
எழுதப்படாத ஓர் சரித்திரத்தை
மௌனத்தால் கதைத்துக் கொண்டிருந்தன,
சாம்பல் துகள்களுக்கிடையில் கருஞ்சிறகுகளும்
சாம்பல் துகள்களுக்கிடையில் கருஞ்சிறகுகளும்
வெண்புன்னகையும்...
- தேனு
நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23611:2013-04-16-06-18-46&catid=2:poems&Itemid=265
No comments:
Post a Comment