ஒரு காற்புள்ளி..
சொற்கள் அர்த்தமற்றுப் போகும் என்றபடி
வீசும் கோர்வையின் விரல் பிடித்து நடக்கிறது,
உருவத்தின் நிலையை மறந்தபடியும்,
உருவத்தின் தேவையை மறுத்தபடியும்..
வீசும் கோர்வையின் விரல் பிடித்து நடக்கிறது,
உருவத்தின் நிலையை மறந்தபடியும்,
உருவத்தின் தேவையை மறுத்தபடியும்..
துகள்களின் கூட்டு எண்ணிக்கை
மீண்டும் தூணாகாது என்பதில் துவங்குகின்றன,
பிரசுரிக்கச் சேர்த்து வைத்திருந்து
சொற்களாய் உருமாறி கொண்டிருக்கும் காற்புள்ளிகளிலிருந்து
வெடித்து நீர்க்கும் அர்த்தங்கள்...
மீண்டும் தூணாகாது என்பதில் துவங்குகின்றன,
பிரசுரிக்கச் சேர்த்து வைத்திருந்து
சொற்களாய் உருமாறி கொண்டிருக்கும் காற்புள்ளிகளிலிருந்து
வெடித்து நீர்க்கும் அர்த்தங்கள்...
அர்த்தங்களின் இடைவெளி ஒன்றி அச்சில் வார்க்கும்
ஓர் நீண்ட சொல் உருவாவதை
மெலிதாய் கூட சொல்வதற்கான தேவை இருப்பில் இல்லை..
ஓர் நீண்ட சொல் உருவாவதை
மெலிதாய் கூட சொல்வதற்கான தேவை இருப்பில் இல்லை..
உருவான சொல்லின் முற்று நிலைக்குத் தேவையென,
காற்று விடுத்துப் போகும் ஒற்றை முற்றுப்புள்ளியை நோக்கி ஓடுகிறது விழ மறந்த சொல்லீர்ப்பு..
காற்று விடுத்துப் போகும் ஒற்றை முற்றுப்புள்ளியை நோக்கி ஓடுகிறது விழ மறந்த சொல்லீர்ப்பு..
- தேனு
நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27629-2015-01-05-06-49-55
No comments:
Post a Comment