ஒரு உரையாடல்
மௌனித்திருந்த வேளையில்,
இரு உடல்களுடன் தனிமை நாற்றமும்
அறை முழுக்க
கட்டவிழ்க்கப்பட்டிருந்தது..
.
மௌனித்திருந்த உரையாடலின்
முன்குறிப்பு
ஒற்றை இரவிலோ,
ஒற்றை கவிதையிலோ
நிச்சயமாக நிறையாது எனக்கு..
.
பார்வைகளில் பரிமாறப்படும் ஒரு மன்னிப்பில்
நான் நானாகவும்
அவள் நானாகவும் ஒன்றிணைய
அறையின் விளக்குகள்
வெள்ளை நிறத்தில் மழை பொழிவதைப்
விரிவாகச் சொல்வதற்கில்லை...
காதல் என்னும் ஒற்றை சொல்
போதுமானது..
.
பிறகான மிச்ச இரவில்
எங்களுக்குள்ளான இடைவெளியை
நிரப்பிடுகின்றன,
ஒன்றோடொன்று புணரத்துவங்கிய
விழிகளும் விரல்களும்..
- தேனு
நன்றி திண்ணை ,
பிறகான மிச்ச இரவில்
ReplyDeleteஎங்களுக்குள்ளான இடைவெளியை
நிரப்பிடுகின்றன,
ஒன்றோடொன்று புணரத்துவங்கிய
விழிகளும் விரல்களும்..
இரட்டை ரோஜா இரவு....அழகான கவிதை
as usual the words are mesmerizing
ReplyDeleteமௌனித்திருந்த உரையாடலின்
ReplyDeleteமுன்குறிப்பு
ஒற்றை இரவிலோ,
ஒற்றை கவிதையிலோ
நிச்சயமாக நிறையாது எனக்கு..
....very nice!
விழிகளிற்கும், விரல்களிற்கும் கலவியில் உள்ள பங்கினை உங்களின் கவிதை குறியீட்டின் மூலம் சொல்லி நிற்கிறது.
ReplyDeleteசத்தமாக
ReplyDeleteஒரு உரையாடல்
மௌனித்திருந்த வேளையில்,
இரு உடல்களுடன் தனிமை நாற்றமும்
அறை முழுக்க
கட்டவிழ்க்கப்பட்டிருந்தது..//
இங்கே கவிஞர் மௌனங்களூடாகத் தொடங்க இருக்கும் மர்ம் யுத்தத்தினை அழகுறச் சொல்லத் தொடங்குகிறார்.
தனிமையின் நாற்றமும்...இத்தோடு பெண்மையின் வாசமும் எனச் சேர்ந்திருந்தால் கவிதை, இன்னும் ஒரு படி மேற் சென்று ஆழமான பொருள் உணர்த்தியிருக்கும் சகோ.
மௌனித்திருந்த உரையாடலின்
ReplyDeleteமுன்குறிப்பு
ஒற்றை இரவிலோ,
ஒற்றை கவிதையிலோ
நிச்சயமாக நிறையாது எனக்கு..//
மௌனங்கள் ஆயிரம் கதைகளைச் சொல்லும் என்றாலும்,
கவிஞரின் சிந்தனையின் வெளிப்பாட்டில் மௌனங்கள் பல வார்த்தைகளை உணர்த்த தவறி விட்டன என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மௌனம் சம்மதத்திற்கு அறி குறியாகவும், தீண்டும் போது மௌனமாய் இருந்தால்...சம்மதம்... எனும் தோரணையிலும் மௌனங்கள் இருப்பதாக அறிஞர்கள் கூறுவார்கள்.
ஆனால் இங்கே உங்களுக்கு வாய்த்துள்ள மௌனம் முரட்டு மௌனமாக இருக்கும் என நினைக்கிறேன்,
ஹா...ஹா...
அறையின் விளக்குகள்
ReplyDeleteவெள்ளை நிறத்தில் மழை பொழிவதைப்
விரிவாகச் சொல்வதற்கில்லை..//
இந்த உயர்வு நவிற்சியணி கவிதைக்கு மேலும் அழகு சேர்த்து இரட்டை ரோஜா இருளின் அழகுகளை வெளிச்சமாக்குகிறது.
இரட்டை ரோஜா இரவு- காதலில் விரல்களுக்கும், விழிகளுக்கும் உள்ள பங்களிப்பினைச் சொல்லி நிற்கிறது.
ReplyDelete