Tuesday, June 28, 2011

மிட்டாய் இரவுகள்


மிட்டாய்கோப்பையைத்
தொக்கிக் கொண்டு நிற்கிறது
அந்தவொரு கரடி
என் படுக்கையறை மேசை மீது...

 
மிட்டாய்களை நிரப்பிடும் கோப்பையில்
துகள் துகளாய் பிரித்தெடுத்து
என்னையும் நிரப்பி நகைக்கிறது
மௌனம் கதைக்கும் இதழ்கள்..


காத்திருப்புகள் அதீதமாகும் பட்சத்தில்
மிட்டாய்கோப்பையை
இறுக மூடிக் கொண்டு
பாராமுகமாய் திரும்பிக் கொள்கிறது..


புறக்கணிப்பிற்குப் பிறகான
இரவுகள் முழுதும்
மிட்டாய்கரடி கனவுகளுடனே
நிரம்புகிறது எனக்கு...

என் கையோடு
பிசுபிசுத்து விடுகின்றன
கோப்பை நிறைக்கா
மிட்டாய்கள் சில..


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4286

1 comment:

  1. இரவுகளில் இன்ப அவஸ்தை தரும் ஒன்றினைக் குறியீடாக்கி, இங்கே மிட்டாய் வடிவம் கொடுத்துக் கவிதை படைத்திருக்கிறீங்க. அருமை.

    ReplyDelete